சென்னை: தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம் வரைந்தவரை, ‘வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’ என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

3ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரையிலான 741 தமிழ் எழுத்துகளால் கணேஷ் என்ற ஓவியர், திருவள்ளூவர் ஓவியத்தை வரைந்துள்ளார். அதை தமிழக முதல்வர் ஸ்டாலினின் டுவிட்டர் பதிவின் கீழாக கணேஷ் பதிவிட்டு, தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து. கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள தமிழ் எழுத்துக்கள் 741 கொண்டு திருவள்ளூர்ஓவியத்தை வரைந்தேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஓவியத்தை கண்டு வியந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கணேஷ்க்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’ எனப் பாராட்டியுள்ளார்.