சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வழிப்பாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில் இந்த மாதமும் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தளர்வுகள் காரணமாக வழிப்பாட்டுத்தலங்கள், மால்கள் என பெரும்பாலானவைகள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால், கடற்கரை போன்ற ஒருசிலவற்றை திறக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில், மக்கள் பொது இடங்களில் கூடுவதை மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து, இந்த மாதமும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கா அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். அதன்படி, வரும் 23ஆம் தேதி காலை 10.38 மணிமுதல் 24ஆம் தேதி காலை 8.56 மணிவரை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.