சென்னை:  பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு, மாணவர்கள் சேர்க்கை  தொடர்பாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை இன்று முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகள் நடப்பு கல்வி ஆண்டில் அமலாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவு பற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்த குழுவினர்,  தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து ஆய்வு செய்து வந்தனர். தொழிற்படிப்புகளில் உள் ஒதுக்கீடு அளிப்பதா அல்லது சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதா என குழு ஆய்வு நடத்திaது. அந்த ஆய்வு  அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆய்வு குழு சமர்பிக்கிறது.

இதைத்தொடர்ந்து,   நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரைகள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமலாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.