சென்னை: பாஜக செய்தித்தொடர்பாளர் குஷ்பு சுந்தர் டிவிட்டர் அக்கவுன்ட் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது. அதை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் கோலோச்சி வந்த நடிகை குஷ்பு, அரசியல் ஆர்வம் காரணமாக கட்சிகளில் இணைந்த பணியாற்றி வருகிறார். 1980ல் சினிமா துறைக்குள் நுழைந்த வர் சுமார் 209 ஆண்டுகள் சினிமா துறையில் நட்சத்திராக ஜொலித்ததுடன், இயக்குனர் சுந்தரை மணமுடித்து, தமிழகத்தின் மருமகளாக வாழ்த்து வருகிறார்.
அரசியல் மற்றும் சமுக நிலைப்பாடுகளில் ஆர்வம் மிக்க குஷ்பு தனது கருத்துக்களை ஆணித்தரமாகவும், பகிரங்கமாகவும் தெரிவிப்பதில் தயங்குவது கிடையாது. , 2010ல் திமுகவில் இணைந்தார். ஆனால், அங்கு தலைமையிடம் மினக்கசப்பு ஏற்படவே அங்கிருந்து விலகி 2014ல் காங்கிரசில் சேர்ந்தார். அதன்பின் காங்கிரசில் இருந்து விலகி 2020ல் பாஜகவில் சேர்ந்தார். தற்போது பாஜக செய்தித்தொடர்பாக பணியாற்றி வருகிறார். நடைபெற்று முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக தமிழக சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் இவர் போட்டியிடு தோல்வி சந்தித்தவர்.
அரசியல் தொடர்பான கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி, பளிச்சென பதிவிடுபவர் குஷ்பு, சமீபத்தில், மாநில கவர்னர்கள் நியமனம் குறித்து கூட, பாஜக தலைமைக்கு எதிரான கருத்தை கூறியிருந்தார். இதனால், அவர் பாஜகவில் இருந்து விலகுவார் என தகவல்கள் பரவின.
இந்த நிலையில், குஷ்புவின் டிவிட்டர் அக்கவுன்ட் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கடந்த அண்டு (2020) ஏப்ரல் 7ந்தேதியும் குஷ்புவின் டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஹேக் செய்யப்பட்டு உள்ளது.