சென்னை: தமிழ்நாட்டில் 82000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய தொழிற்துறைக்கான ஒப்பந்தம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்றது முதல், மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தை தொழில்துறையில் சிறந்த மாநிலமாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறார். புதியதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், இன்று ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்கு போக்குவரத்து, Capital land, Adani, JSW உள்ளிட்ட துறைகளில் 47 திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்தங்கள் ‘ மூலம், 82,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இவை தவிர 14 திட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.