டில்லி
இந்தியாவில் நேற்று 38,319 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,11,43,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,319 அதிகரித்து மொத்தம் 3,11,43,595 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 501 அதிகரித்து மொத்தம் 4,14,141 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 38,521 பேர் குணமாகி இதுவரை 3,03,00,762 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,16,333 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 9,000 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,14,190 ஆகி உள்ளது நேற்று 180 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,27,031 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,756 பேர் குணமடைந்து மொத்தம் 59,80,350 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,03,486 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 13,956 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 31,60,937 ஆகி உள்ளது. இதில் நேற்று 81 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,350 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 13,613 பேர் குணமடைந்து மொத்தம் 30,20,052 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,25,039 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,708 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,83,947 ஆகி உள்ளது இதில் நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,157 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,463 பேர் குணமடைந்து மொத்தம் 28,18,476 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 29,291 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,079 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,35,402 ஆகி உள்ளது இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,724 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,463 பேர் குணமடைந்து மொத்தம் 24,73,781 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 27,897 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,974 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,40,096 ஆகி உள்ளது. நேற்று 17 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,132 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,290 பேர் குணமடைந்து மொத்தம் 19,02,256 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,708 பேர் சிகிச்சையில் உள்ளனர்.