நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடிக்கிறார். இந்த புதிய படத்தை இயக்குனர் இரா சரவணன் இயக்குகிறார்.

நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடிகர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரகனியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு தகவல் ஒன்று இசையமைப்பாளர் டி.இமான் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் மூலம் பவித்ரா சாரி என்னும் புதிய பாடகரை அறிமுகப்படுத்துகிறார். இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதுகிறார். இதனை தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]