சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதிகளில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடந்த 2029ம் ஆண்டு இறுதியில் புதியதாக தொடங்கிய 9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர்.
புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்லையும் செப்டம்பர் 15க்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, தேர்தல் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த துவங்கி முன்னேற்பாடுகளும் தயார் செய்து வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத மீதமுள்ள பகுதிகளில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.