டெல்லி: நாடு முழுவதும் இன்று மேலும் 38,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.99% ஆக குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,949 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 542 ஆக பதிவாகியுள்ளது, 40,026 பேர் குணமடைந்து உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 38,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 2,857 ஆயிரம் குறைவு. இதுவரை 3,10,26,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாராந்திர பாதிப்பு விகிதம் 5% க்கும் குறைவாக உள்ளது, தற்போது இது 2.14% ஆக உள்ளது. தினசரி நேர்மறை விகிதம் 1.99%, தொடர்ந்து 25 நாட்களாககு 3% க்கும் குறைவாக பாதிப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 542 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 4,12,531 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளையில் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 40,026 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,83,876 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் 97.28% ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,30,422 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை நாடு முழுவதும் 39,53,43,767 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 38,78,078 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.