டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு 624 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதால், தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,09,46,074 ஆக உள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 5,886 ஆயிரம் அதிகம்.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 624 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,11,408 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 41,000 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,04,720 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 4,29,946 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 38,76,97,935 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 37,14,441 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.