டில்லி
இந்தியாவில் நேற்று 40,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,09,44,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,215 அதிகரித்து மொத்தம் 3,09,44,949 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 623 அதிகரித்து மொத்தம் 4,11,439 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 42,338 பேர் குணமாகி இதுவரை 3,00,97,096 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,24,154 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 7,243 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 61,72,645 ஆகி உள்ளது நேற்று 196 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,26,734 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,978 பேர் குணமடைந்து மொத்தம் 59,38,734 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,04,406 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 14,539 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 30,87,673 ஆகி உள்ளது. இதில் நேற்று 124 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,810 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,331 பேர் குணமடைந்து மொத்தம் 29,57,201 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,15,184 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,913 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,74,597 ஆகி உள்ளது இதில் நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,944 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,489 பேர் குணமடைந்து மொத்தம் 28,04,596 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 34,234 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,505 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,12,943 ஆகி உள்ளது இதில் நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,502 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,058 பேர் குணமடைந்து மொத்தம் 24,59,223 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 31,218 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,567 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,26,988 ஆகி உள்ளது. நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,042 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,058 பேர் குணமடைந்து மொத்தம் 18,87,236 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 26,710 பேர் சிகிச்சையில் உள்ளனர்.