
தற்போது தனது புதிய திரைப்படத்தை பூஜையோடு தொடங்கியிருக்கிறார் நடிகர் சசிக்குமார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இந்த புதிய படத்தில் நடிகர் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த புதிய படத்திற்கு கைதி, கேஜிஎஃப் படங்களின் ஸ்டன்ட் இயக்குனர்களான அன்பறிவு சகோதரர்கள் இப்படத்திற்கு ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகிறார்கள்.
இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய திரைப்படத்தில் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல போட்டியாளர் சம்யுக்தா சண்முகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
[youtube-feed feed=1]