டெல்லி: கொரோனா பரவல் குறித்து தமிழ்நாடு உள்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 16ந்தேதி காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் மாநில அரசுகள் அறிவித்துள்ள தளர்வுகளால், மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பி வருகிறது. அதன் காரணமாக பல இடங்களில் மக்கள் மீண்டும் கூட்டம் சேர்வதால், சில மாவட்டங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரம், ஒடிசா மாநில முதல்வர்களுடன் ஜூலை 16ஆம் தேதி காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசிக்கவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்.
அப்போது தடுப்பூசி இயக்கம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது, குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
[youtube-feed feed=1]