பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கே 13’.
இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் ‘டைரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங் மற்றும் இசையமைப்பாளராக யோஹன் பணிபுரிந்துள்ளனர். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து வருகிறார்.
நடிகை பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் டைரி திரைப்படத்தின் டீஸர் ரிலீஸ் பற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியானது.
வருகிற ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு டைரி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.