‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
வெகுநாள் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக நேற்று மாலை ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது.
இந்நிலையில் ’வலிமை’ படத்தில் இயக்குனர் விக்னேஷ் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ’மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன், தற்போது வலிமை படத்தில் அஜித்துக்காக பாடல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.