சென்னை: தலைநகர் சென்னையில் 179 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றது முதல் ஐஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமின்றி, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் என அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பொதுவான இதுபோன்ற அதிகாரிகள் மாற்றம் நடைமுறைதான் என்றாலும், தற்போது கீழ் மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருவது அதிகாரிகள் மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தற்போது சென்னையில் 179 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி ஆயிரம்விளக்கு நுங்கம்பாக்கம் அயனாவரம் சைதாப்பேட்டை. அபிராமபுரம் சிந்தாதரிப்பேட்டை உள்பட அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னையில் சட்டம் ஒழுங்கை காப்பதற்காக அவ்வப்போது எடுக்கப்ப்டும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என தமிழக அரசு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய காவல் ஆய்வாளர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது