சென்னை

சென்னை மாநகராட்சி கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 64 வணிக நிறுவனங்களுக்கு ரூ.2.09 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.  எனவே ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்த தளர்வுகளால் பல வணிக வளாகங்கள், கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  இதனால் சென்னையில் தி நகர், புரசைவாக்கம், பாடி, ராயபுரம் பகுதிகளில் கூட்டம் அலை மோதுகிறது.

இந்த பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதாக புகார்கள் வெளியாகின.  இதையொட்டி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் குழு நகரெங்கும் நேற்று சோதனை நடத்தியது.  இவர்கள் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், ராயபுரம் என பல இடங்களில் சோதனை நடத்தினர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி திநக்ர் பகுதிகளில் நேற்று சோதனை நடத்தி உள்ளார்.  அப்போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 64 வணிக நிறுவனங்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  நேற்று ஒரே நாளில் ரூ.2.09 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

[youtube-feed feed=1]