அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் பேட்ச்அப் ஒர்க் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த பேட்ச்அப் வேலை 4 நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அஜித் கிளீன் ஷேவ் செய்து அதுவும் பெப்பர் லுக்கில் சிரித்த முகமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். போலீஸ் கமிஷனர் அலுவலகம் போன்று செட் அமைத்து ஷூட்டிங் நடந்து வருகிறது.
மேலும் ரிலீஸுக்கு முன்பே வலிமை ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.