ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடிக்கிறார், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது “வலிமை அப்டேட்” என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.

இதைத் தாண்டி பிரதமர் மோடி பயணித்த இடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டு வந்தார்கள். யூரோ கால்பந்து போட்டியின் போது அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு பதாகைகளை கூட ஏந்தியுள்ளனர்.

இதனிடையே, ‘வலிமை’ படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘வலிமை’ தமிழக விநியோக உரிமையை பெரும் விலை கொடுத்துக் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் இன்று வலிமை மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.அதை தொடர்ந்து #ValimaiMotionPoster என்ற ஹேஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர்.தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

[youtube-feed feed=1]