சென்னை:
கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாததால் தியாகராய நகர் லெஜன்ட் சரவணா ஸ்டோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், தியாகராய நகர் லெஜன்ட் சரவணா ஸ்டோரில், கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றப்படவில்லை என்றும், விதிகளை மீறி அளவுக்கதிகமாக வாடிக்கையாளர்களை அனுமதித்ததாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் நாளை முதல் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel