சென்னை: தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் புதியதாக மேலும்  2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி  49 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மாநிலம் மழுவதும கடந்த 24 மணிநேரத்தில் 2,913 பேர்  புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மமூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 25,16,011 பேர் ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில்  இன்று  49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,371 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளையில்,  இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 3,321 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 24,49,873 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,50,412 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,43,98,110 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா வார்டில் 32,767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.