டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன்,  1,206 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 42,766  பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனல், இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,07,95,716 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,206 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,07,145 ஆக அதிகரித்துள்ளது..

நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 45,254 பேர் குணமடைந்துள்ளனர்.  இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,99,33,538 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் தற்போதைய நிலையில்,  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,55,033 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 37,21,96,268 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.