மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 8,992 கர்நாடகாவில் 2,290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 8,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 61,40,968 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 738 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,25,034 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 10,458 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 59,00,440 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,12,231 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் இன்று 2,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 28,67,158 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 148 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 35,731 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 3,411 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 29,93,498 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 37,906 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.