சென்னை

மிழகத்தில் இன்று 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 33,224 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,51,631  கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,42,47,698 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இதில் ஒருவர்  வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளார்.  இதுவரை  25,13,098  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 69 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 33,322 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,411  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 24,46,552  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 33,224  பேர் சிகிச்சையில் உள்ளனர்.