சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 3,479 பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 209 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

தமிழக சுகாதாரத்துறை நேற்று இரவு வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 3,479 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,03,481 பேர் ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளல் 73 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,132 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 3,855 பேர் தொற்றின் பிடியில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 24,35,872 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது கொரோனா வார்டில் 34,477 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநில தலைநகர் சென்னையில் நேற்று கொரோனாவால் 209 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை சென்னையில் 5,33,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று 5 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 8,232 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே வேளைய்ல 368 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,23,841 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1,776 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
06.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 26,63,461 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன், 06.07.2021 அன்று 4,786 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு:
[youtube-feed feed=1]







