கொல்கத்தா: நந்திகிராம் வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற திடீரென நீதிபதி பதவியில் இருந்து விலகி உள்ளார்.
நந்திகிராமில் பாஜக சார்பில் மம்தாவை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். இந்த தொகுதியில் மம்தா தோல்வியை தழுவினார். இதையடுத்து, சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, மம்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி கவுஷிக் சந்தா விசாரித்தார். இதற்கு முதல்வர் மம்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏனென்றால் கவுஷிக் சந்தா, மேற்குவங்க மாநில பாஜகவின் சட்டத்துறை தலைவராக பதவி வகித்திருந்தார். நீதிபதி கௌஷிக் சந்தாவுக்கு பாஜக தலைவர்களுடன் தொடர்பு என மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர் குற்றசாட்டியிருந்தார்.அதனால் வழக்கை விசாரிக்க மம்தா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வழக்கில் இருந்து விலக மறுத்த நீதிபதி கவுஷிக் சந்தா, நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கவுஷிக் சந்தா, அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். இதனால், அவர் விதித்த ரூ.5 அபராதம் தொகை செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.