சென்னை: சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த யுடியூபர் ப்ப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை சென்னை மாநகராட்சி ஆணையர் குண்டல் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சோசியல் மீடியா வலைதளமான யுடியூபில் பப்ஜி விளையாட்டு மூலம் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்து வந்த பஜ்ஜி மதன்மீது, தொழில் ரீதியாக 150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 18-ஆம் தேதி தருமபுரியில் வைத்து போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர் அவர்மீது 4 பிரிவுகளில் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கிடையில் பப்ஜி மதன் தாக்கல் செய்த ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் பாய்ந்தது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதால் ஓராண்டுக்கு மதனுக்கு ஜாமீன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.