ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது “வலிமை அப்டேட்” என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.
இதைத் தாண்டி பிரதமர் மோடி பயணித்த இடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டு வந்தார்கள்.
இதனிடையே, ‘வலிமை’ படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘வலிமை’ தமிழக விநியோக உரிமையை பெரும் விலை கொடுத்துக் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் குறி சொல்பவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சாமியாரும் அவர்களுக்கு விபூதி வைத்து ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைக்கிறார்.
அநியாயம் பண்றானுங்க நம்ம பசங்க🤣🤣😅😆 வலிமை அப்டேட்#ValimaiUpdate #AjithKumar pic.twitter.com/ca7Xw5mJTd
— குமரி மாவட்ட அஜித் ரசிகர்கள் (@Kumarimavatam74) July 4, 2021