பீஜிங்: 
சீனாவில் 19 மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் அன்ஹுய் மாகாணத்தில் வசித்து வந்த ஒரு லட்சத்து 37 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாகாணத்தில் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் பருவமழை பெய்து வருகிறது. இதில் அதிகளவு பாதிப்பு அன்ஹுய் மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் பெய்த கனமழையில் சிக்கி பயிர்கள் சேதமடைந்துள்ளதுடன், மாகாணத்தில் பல சாலைகள் மோசமாகச் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த இயற்கை பேரிடரால் 8.400 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன இதனால் 270  மில்லியன் யுவான் அதாவது 41 மில்லியன் டாலர்  இழப்பு  ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
மேலும் பேசிய அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ள உள்ளூர் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களுக்குத் தேவையான படுக்கைகள், குடிநீர் மற்றும்  மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.