மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நோயாளிகளில் ஆறு பேர், கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க அமிர்தவல்லி இலையை கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயத்தை எடுத்துக்கொண்டது தெரியவந்தது.

அமிர்தவல்லி இலை

எச்.ஐ வி. எனும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அமிர்தவல்லி தழையால் ஆன கஷாயத்தை எடுத்துக்கொண்ட பின் அவரக்ளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்ததாக சொல்லப்பட்டது.

இதன் அடிப்படையில் கொரோனாவை சமாளிக்க பல்வேறு இயற்கை மற்றும் கைவைத்திய முறைகளை கையாள அறிவுறுத்திய மத்திய ஆயுஷ் அமைச்சகம் இந்த அமிர்தவல்லி தழையையும் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் பொதுவாக இதனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர், இந்நிலையில் மும்பை மருத்துவமனை மருத்துவர்கள் தவிர வேறு சில மருத்துவர்களும் இந்த தழையால் ஆன கஷாயத்தை அடிக்கடி பருகுவது கல்லீரல் நோயை உருவாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.