டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். . தொடர்ந்து 53-வது நாளாக பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கையை விட குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தொற்று பாதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. அதே வேளையில் குணமடைவோர் விகிதம் அதிகரித்து உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 46 ஆயிரத்து 617 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் படிப்படியாக குறைந்து வந்து. இன்று 40ஆயிரத்துக்கும் கீழே குறைந்ததுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் 39,796- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட 7.6% இன்று குறைந்துள்ளது. மொத்தத்தில் வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தொடர்ந்து 5 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.40 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த மார்ச் 19 ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட குறைந்தபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 42,352 பேர் குணம் அடைந்துள்ளனர் இதுவரை குணமடைந்தோர் 2,97,00,430 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு காரணமாக 723 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா காரணமாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,02,728 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 82 ஆயிரத்து 071 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 35,28,92,04 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.