சென்னை
தமிழக அரசு மேகதாது அணை திட்டத்தை ஏற்காது என கர்நாடக அரசுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மேகதாது அணை குறித்து ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் “மேகதாது அணை திட்டத்தினால் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எனவே இந்த அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கர்நாடகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதில் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் மு க ஸ்டாலின், “கர்நாடக அரசு மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும். இந்த அணை பெங்களூரு குடிநீர் தேவைக்காக கட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெங்களூருக்க் வெகு தொலைவில் இந்த அணை கட்டப்படுகிறது. எனவே இது பெங்களூரு குடிநீருக்காக கட்டப்படுவதாக சொல்லப்படுவதை ஏற்க முடியாது.
மேலும் மேகதாது அணை கட்டுவதால் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்னும் கருத்தை தமிழகம் ஏற்காது. ஏற்கனவே கர்நாடகாவில் குடிநீருக்காக போதிய கட்டமைப்புகள் உள்ளன. எனவே தமிழக அரசு இந்த அணை திட்டத்தை ஏற்காது. தமிழகத்துடன் நல்லுறவு தழைக்க கர்நாடக முதல்வ்ர் எடியூரப்பா ஒத்துழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.