சென்னை: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து, தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நட்த்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இதையடுத்து ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கொரோனா பரவல் நிலை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மருத்துவ நிபுணர்கள்,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.  இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.