சென்னை: கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் அசோக்குமாரும், தி.மு.க., சார்பில் செங்குட்டுவனும் போட்டியிட்டனர். இதில், திமுகவை விட, 794 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.கவைச் சேர்ந்த அசோக் குமார் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் வெற்றியை எதிர்த்து, தி.மு.க., வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், “வாக்கு எண்ணிக்கையின் போது அசோக்குமார் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், 605 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அலுவலர் நிராகரித்துவிட்டார். இது சட்ட விரோதம். மேலும், ‘அசோக்குமார் தனது வேட்புமனுவில் சொத்து தொடர்பான தகவலை மறைத்துள்ளார். இது, சட்டப்படி ஏற்புடையது அல்ல.வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு சவாங்கியுள்ளார். அதனால், முறைகேடாக பெற்ற அசோக்குமாரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்றுதெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.