சென்னை: சமையலுக்கு தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயத்ததப்பட்டு உள்ளது. இது இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எண்ணைப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு விலையும் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு (2020) கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சில மாதங்கள் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. அதிகபட்சமாக 2020ம் ஆண்டு , மே மாதத்தில்  குறைந்தபட்ச விலையாக ஒரு சிலிண்டரின் விலை 569 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது.பின்னர் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதும், நிலையில், பின்னர் தொடர்ந்து உயரத் தொடங்கியது.

2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம்   சிலிண்டர் ஒன்றின் விலை 610 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் ஒன்றாம் தேதி  ரூ.50  உயர்த்தப்பட்டு  ரூ. 660க்கு  விற்பனை செய்யப்பட்டது. அதே மாதம்  15 ஆம் தேதி மானியமில்லாத சிலிண்டர் (Non-subsidized cylinder) ஒன்றின் விலை 710 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

2021ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 2முறை  சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. தடாலடியாக சிலிண்டருக்கு ரூ.100 உயர்த்ததப்பட்டு ரூ.810 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேலும் ரூ.15 விலை உயர்த்தப்பட்டு ரூ.825க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (ஜூலை 1) முதல் மேலும் ரூ.25 விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னையில்  சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயத்ததப்பட்டு உள்ளது.

வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் மீதும் ரூ.84.50 விலை உயர்ந்து சிலிண்டர் ரூ.1,687.50ஆக  நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சமையல் எரி வாயுவின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது  இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.