சென்னை: கலைஞரை கைது செய்த 20வது ஆண்டு தினம் இன்று. கடந்த இன்று 2001-ம் ஆண்டு ஜூன்-30-ம் தேதி அன்று கலைஞரை கைது செய்து அடாவடி செய்தது அப்போதையை ஜெயலலிதா அரசு. அய்யோ கொல்றாங்களே என கருணாநிதி ஓலமிட்ட காட்சி தமிழ்நாடு மக்களின் மனதை பதபதைக்க வைத்தது. அவர் கைது செய்யப்பட்ட தருணம் தொடர்பான வீடியோ இன்று மீண்டும் வைரலாகி வருகிறது.
2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மேம்பால ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காவல்துறை கைது செய்த சம்பவம் எந்த அரசியல் தொண்டர்களாலும் மறக்கமுடியாத ஒன்று.
ஜூன் 29ம் தேதி நள்ளிரவு, கைது செய்யப்பட்டு, ஜூன் 30ந்தேதிஅதிகாலை தமிழக மக்களின் காதுகளில் பேரிடியாக விழுந்த தகவல் கருணாநிதி கைது.. அதைத்தொடர்து, அவர் கைது செய்யப்பட்ட காட்சி தொடர்பான புகைப்படங்கள், அய்யோ கொல்றாங்களே என்று கருணாநிதி அலறும் டவீடியோவையும் மீடியாக்களில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப் ஏற்படுத்தியது. தமிழகமே தடுமாறியது. ஜெயலலிதா அரசின் அராஜக நடவடிக்கைக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் குரல் எழுப்பினார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கைது சம்பவம் இதுதான்.
அப்போது, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த முத்துக்கருப்பன் தலைமையிலான காவல்படை கருணாநிதியின் வீட்டில் அதிகாலையில் நுழைந்து கைது செய்தது. அந்த நேரத்தில் போலீசாரை சற்றும் எதிர்பாராத கருணாநிதி முரசொலி மாறனுக்கு தொலைப்பேசியில் தகவல் தெரிவித்தார். இரவு உடையில் இருந்த கருணாநிதியை துணி மாற்றக்கூட அனுமதிக்கவில்லை காவல்துறை. அணிந்திருந்த லுங்கியுடனே கைது செய்யப்பட்ட கருணாநிதியை போலீசார் எங்கு அழைத்து செல்கின்றனர் என்பதே யாருக்கும் தெரியவில்லை. பின்னர் வேப்பேரி காவல்நிலையம் அழைத்துச்செல்லப்பட்டு, பபின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 10ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
சிறையில் அடைப்பதற்காக கருணாநிதி அழைத்து செல்லப்பட்ட போது சிறை வாசலிலேயே அமர்ந்து சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கருணாநிதி கைதின் போது அவர் முதன்முதலில் அழைத்தது முரசொலிமாறனைத் தான். முரசொலி மாறன் அப்போது மத்திய அமைச்சராக இருந்தார். “அய்யோ கொல்றாங்களே, கொல்றாங்களே” என்ற கருணாநிதியின் கூக்குரல் சுப்ரபாதம் போல அவர்களின் குடும்பத் தொலைக்காட்சியில் போட்டுக் காட்டப்பட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்றதை யாராலும் மறக்க முடியாது.