
2012-ம் ஆண்டு நினைத்தது யாரோ என்ற படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார் கார்த்திக் யோகி. அதனை தொடர்ந்து உறுமீன், சவாரி போன்ற படங்களில் நடித்தார்.
சவாரி, பாலூன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகராக பணியாற்றிய கார்த்திக் யோகி நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று கார்த்திக் யோகிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இயக்குனர் கார்த்திக் யோகிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.கார்த்திக் யோகியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel