சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையின் தீவிரம் உச்சத்தில் இருந்தது. தினமும் 30,000-க்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின. தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.

கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில்,நடிகர் பிரசாந்தும், அவரது தந்தை தியாகராஜனும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர். அவர்கள் இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தனர்.