அறிவோம் தாவரங்களை – ஆப்பிள் மரம்

ஆப்பிள் மரம் (Malus domestica)

மத்திய ஆசியா உன் தாயகம்!

12 மீ. வரை உயரம் வளரும் பசுமை மரம் நீ!

சீன நாட்டில் அதிகமாய் இருக்கும் சிறப்பு மரம் நீ!

கி.பி 17.ஆம் நூற்றாண்டில் ஆப்பிள் என்ற அடையாளக் குறியீட்டால் அழைக்கப்பட்ட கனிமரம் நீ!

குமளிப்பழம், சீமைஇலந்தைப் பழம், ஆப்பழம், ஆக்குத்தி பழம் எனப் பல வகையில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!

75 ஆயிரம் இரகங்கள் கொண்ட இனிய பழ மரம் நீ !

உன் பழம் ரஷ்ய நாட்டின் லோகோ கட்சியின் சின்னம்!

இதயநோய், எடைக் குறைப்பு, மகப்பேறின்மை, மச்சம் மறைவு, பல்வலி, புற்றுநோய், நீரிழிவு, வாய்த் துர்நாற்றம், அஜீரணம், தோல் நோய்கள், ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

ஒயின் மற்றும் மது பானம் தயாரிக்கப் பயன்படும் உன்னதப் பழ மரமே!

அமெரிக்க, ஸ்வீடன், டென்மார்க் நாடுகளில் ஆசிரியர்களுக்கு ஊதியமாய் அமைந்த இனிய ஆப்பிள் பழ மரமே!

‘தினம் ஒரு ஆப்பிள் மருத்துவரைத் தூர வைக்கும்’ என்ற பழமொழிக்கு வித்தாய் அமைந்த சத்துப் பழ மரமே!

ஆதாம், ஏவாள் இவர்களின் பாவத்தின் அடையாளக் குறியீட்டுப் பழ மரமே!

கிறிஸ்தவர்களின் பாரம்பரியக் கனி மரமே!

பால் தயாரிக்கப் பயன்படும் ஆப்பிள் மரமே!

ஆப்பிளைக் கொடுத்துக் காதலை வெளியிடும் கிரேக்கப் பண்பாட்டின் அடையாளக் குறியீட்டுக் கனி மரமே!

1000 கோடி டாலர் அளவில் விலைபோகும் வணிகப் பழமே! ஆரோக்கியத்தைக் கொடுக்கும் அற்புதப் பழ மரமே!

 நீவிர் பசியும் சுவையும் உள்ளவரை வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📱9443405050.