சென்னை: நடிகையை திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி ஏமாற்றி குடும்பம் நடத்திய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினி என்பவருடன் பல ஆண்டுகளாக குடித்தனம் செய்து வந்துள்ளார். ஆனால், திருமணம் செய்ய மருத்து விட்டதாக அவர்மீது சாந்தினி புகார் அளித்தார். மேலும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
அவரது புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை காவல்துறையினர் பெங்களூருவில் ஜூன் 20 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, மணிகண்டன் தரப்பில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மகுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.