சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உனடியாக  தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அ.தி.மு.க ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்தது. இதில் சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். பின்னர் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்தனர். இதன் பின் ஓபிஎஸ் துணை முதல்வராக பதவிவகித்தார். இந்த நிலையில் சசிகலா குடும்பத்திலும் பிரச்சினைகள் எழுந்தது. டிடிவி தினரகன், திவாகரன் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். பின்னர்,  அதிமுகவில் இருந்த  சசிகலா ஆதரவாளர்களைக்கொண்டு டிடிவி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து,  சிகலாவின் சகோதரர் திவாகரனும்  ‘அண்ணா திராவிட கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். ஆனால் தொடர்ந்து கட்சியை வழிநடத்தாமல் ஒருங்கியே இருந்தார்.

இந்த  நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக திவாகரனுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள்  தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.