மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘எமெர்ஜன்ஸி’ என்ற படம் தயாராகிறது. இப்படம் எமர்ஜென்ஸி காலகட்டத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாகவுள்ளது.

இதில் இந்திரா காந்தியாக நடிகை கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார். இப்படத்தை கங்கணாவே தயாரிக்கவும் செய்கிறார்.

இந்திரா காந்தி கதாபாத்திரத்துக்காக முழு உடல் பரிசோதனை மேற்கொண்டதாக கங்கணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.