சென்னை: கவியரசு கண்ணதாசன் 95வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிரந்தரமானது துன்பம்.. வந்து போவது இன்பம்.. இதுதான் வாழ்க்கை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்..! என்ற தத்துவத்தை உலகுக்கு உரைத்த கவியரசு கண்ணதாசனின் 95வது பிறந்த நாள் இன்று. அவரது நினைவை போற்றும் வகையில், சென்னை தி.நகர். நாராயணா சாலையில் அமைந்துள்ள கண்ணதாசன் உருவ சிலைக்கு தமிழகஅரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Patrikai.com official YouTube Channel