அறிவோம் தாவரங்களை – சங்கம் செடி
சங்கம் செடி.(AZIMA TETRACANTHA)
தமிழகம் உன் தாயகம்!
அனைத்து பகுதிகளிலும் கிளைகளைப் பரப்பிப் படர்ந்து வளரும் புதர்ச்செடி நீ!
சங்கு இலை செடி, இசங்கு, முட்சங்கஞ்செடி, சங்கம் எனப் பல்வகைப் பெயர்களில் பரிணமிக்கும் மூலிகைச் செடி நீ!
கீல்வாதம், வாத நோய், பித்தம், ரத்த விருத்தி, சொறி, சிரங்கு, புண், அம்மைக் கொப்புளங்கள், இருமல், ஆஸ்துமா, நீரிழிவு, கண்பார்வை, காய்ச்சல், சிறுநீர்ப் பெருக்கம், காயம், காணாக்கடி, பூச்சிக்கடி, அடிபட்ட வீக்கம், பக்கவாதம், படை, தலை முடி உதிர்தல், புழுவெட்டு, செம்பட்டை முடி ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மூலிகை நிவாரணி நீ!
ஆண்மையை அதிகரிக்கத் தைலம் கொடுக்கும் குறுஞ்செடி நீ!
இலை, வேர், பட்டை, பால், பழம் என எல்லாம் பயன்படும் நல்ல செடியே!
முட்கள் நிறைந்த மூலிகைச் செடியே!பச்சைப் பட்டாணி அளவு உடைய பழச்செடியே!
உடலுக்கு வலிமையைத் தரும் கனிச்செடியே!
கோழைச் சளியைப் போக்கும் வேர் செடியே!
கைப்புச் சுவைக் கொண்ட கற்பகச் செடியே!
வேலிகள் அமைக்கப் பயன்படும் முள் செடியே!
வெள்ளை நிறப் பூப் பூக்கும் சங்கு பூச்செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர் ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.
📱9443405050.