ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா குறித்துப் பேசியுள்ளார்.

ஒரு ரசிகர், உங்களுக்கு நயன்தாராவிடம் பிடித்த விஷயம் எது என்று கேட்க, அவரது தன்னம்பிக்கைதான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்று விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகர், நயனுடன் நீங்கள் எடுத்துக்கொண்டதில் மிகவும் பிடித்த புகைப்படம் எது என்று கேட்டதற்கு, அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து விக்னேஷ் சிவன் பதில் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த சமயத்திலிருந்தே விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.