சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 2வது கூட்டத்தொடரான இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனின் உரையாற்றும்போது, சில வார்த்தை தவறுதலாக இருந்தது. இதை கவனித்த முதல்வர் ஸ்டாலின், உதயசூரியன் உரையை திருத்தி கூறினார்.

தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (ஜூன் 22) நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார். அதையடுத்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கியது.

ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் உதயசூரியனின்  உரையாற்றினார்.  முதன்முதலாக அவர் சபையில் உரையாற்றியதால், பதற்றத்துடன் பேசினார். அப்போது,  நீட் குறித்து தவறுதலாக கூறினார்.

இதை கவனித்த முதல்வர் ஸ்டாலின் உடனே எழுந்து,  “ஆளும் கட்சி உறுப்பினர் உதயசூரியன் தனது உரையில், பதற்றம் காரணமாக நீட்டை உருவாக்க என்று தெரிவித்ததை, நீட்டிலிருந்து விலக்குப் பெறுவதற்காக என மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் கேட்டதற்கிணங்க பேரவைத் தலைவர் அப்பாவு அதனை மாற்றம் செய்தார்.

கட்சி எம்எல்ஏக்களின் உரையை கவனித்த முதல்வரின் செயல் பாராட்டைப்பெற்றது.