சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள  ஊடரங்கு தளர்வினைத் தொடர்ந்து,  சென்னையில் இன்றமுதல் 50 சதவீத பயணிகளுடன்  மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 50 சதவிகித பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. அதுபோல தெற்கு ரயில்வே மூலமாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.  மேலும் மின்சார ரயில்களின் சேவைகளும் அனுமதிக்கப்பட்டு உள்ளத.

இந்த நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மெட் ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னையில் முதற்கட்டமாக மெட்ரோ ரயில் சேவை காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்றும் பின்னர் தேவையின் அடிப்படையில் நேரம் மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் அதிகம் பயணிக்கும் உச்ச நேரங்களான காலை 9 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் 5
நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும். 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்படும்  என தெரிவித்துள்ளது.