அறிவோம் தாவரங்களை – கொக்கோ மரம்

கொக்கோ மரம் (Theobroma cacao)

தென் அமெரிக்கா அமேசான் ஆற்றுப்படுகை உன் தாயகம்!

கி.மு.2000. ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய முதன்மை மரம் நீ!

ஐவரி கோஸ்ட் நாட்டில் அதிகம் காணப்படும் அழகு மரம் நீ!

சாக்கலைட், உணவுப் பொருள்கள், சுவை பானங்கள்,மருத்துவ பொருட்களின் மூல விருட்சம் நீ!

இந்தோனேசியா, காமரூன், நைஜீரியா நாடுகளில் நன்கு வளரும் நளின மரம் நீ!

26 அடி வரை உயரம் வளரும் இனிய மரம் நீ!

ஐஸ்க்ரீம், பேக்கரி வகை உணவுகள் தயாரிக்கப் பயன்படும் விதை மரம் நீ!

ஐந்து வருடங்களில் இரண்டு கிலோ கிராம் உலர் விதைகள் தரும் அதிசய மரம் நீ!

தென்னை,பாக்கு மரத் தோப்புகளின் ஊடு பயிரே!

விதைகள் மூலமும் பதியன்முறை மூலமும் இனப்பெருக்கம் செய்யும் விந்தை மரமே!

இனி்ப்புச் சுவையும் புளிப்புச் சுவையும் கொண்ட கனி மரமே!

சிவப்பு,மஞ்சள் நிற பழம் கொடுக்கும் சிறந்த மரமே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர் ச.தியாகராஜன்.

நெய்வேலி.

☎️9443405050.