சென்னை
நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி தன்னை அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும் தனது அந்தரங்க புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.
மணிகண்டன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். வழக்கு விசாரணையில் மணிகண்டனின் வழக்கறிஞர் மணிகண்டன் திருமணமானவர் எனத் தெரிந்தே சாந்தினி அவருடன் குடும்பம் நடத்தியதாக தெரிவித்தார். மேலும் நடிகையை காயப்ப்படுத்தியதாக கூறும் புகாருக்கும் கருக்கலைப்பு நடந்ததற்கும் ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்தார்.
நடிகை சாந்தினி தரப்பு வழக்கறிஞர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் அளித்தால் அவர் சாட்சியங்களைக் கலைக்கலாம் எனக் கூறி முன் ஜாமீன் வழக்க எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையொட்டி தலைமறைவான மணிகண்டனைத் தனிப்படையினர் கைது செய்துள்ளனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.