சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தலைநகர் சென்னையில், மாநகராட்சி எடுத்த வலுவான பாதுகாப்பினால் கொரோனா வலுவிழந்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையினால் சென்னையில் கொரோனா பாதிப்பு ஒரு சதவீதமாகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 9,118 பேருக்கு கொரோனா, இதுவரை 23,93,864 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். நேற்று 22,720 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதுடன், 22,66,793 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 210 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் 109 பேர், அரசு மருத்துவமனையில் 101 பேர் என 210 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 30,548 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் 1,00,523 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தலைநகர் சென்னையில் நேற்று 559 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,27,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளல் 33 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 7,953 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே வேளையில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 2,367 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,15,199 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 4,683 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
17.06.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 22,73,931 பேருக்கும், 17.06.2021 அன்று 21,570 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்: